Wednesday, June 13, 2012

உருக்கத்துடன் என் நண்பன் மணிக்கு ஒரு மடல்

பிரிவின் வலி என்னவென்றே தெரியாமல் சென்றேன் நான் எனது நண்பனின் மரணத்திற்கு, அங்கே அவன் என்னை அழைப்பது போன்றே இருந்தது ஒவ்வொரு தருணமும், எனது நண்பனிலேயே மிகவும் முக்கியமான அவன் இல்லாதது பெரும் துயரம் தான், கண்ணிலே ஈரம் இல்லை என்றாலும் மனதிலே ஒரு பெரிய பாரம் இருந்தது, அவனை மறப்பது கடினம் தான் எனினும் அவனது நினைவுகள் நம்மை எப்படியும் துயர் படுத்தும், அவனை அடிக்கடி நினைத்தால், அவனை மறுபடியும் இந்த கடினமான உலகிற்கு அழைப்பதற்கு சமம். எனவே எனது நினைப்பிற்கு ஒரு முற்று புள்ளி வைத்து விட்டு அவனது ஆன்மா ஒரு அமைதியான நிலையினை அடைய இறைவனிடம் ஒரு அழுத்தமான பிரார்த்தனை மட்டும் செய்தேன் கடைசியாக,




பிணவறையை வாழ்நாளில் ஒரு நாள் கூட பார்த்ததே இல்லை, அன்று தான், என் நண்பனின் மரணம் அன்று தான் பார்த்தேன், அவனை பார்த்த மறு நிமிடம், அவன் என்னிடம் சகஜமாக பேசுவதை போல் தான் உணர்ந்தேன், ஆனால் அவன் மரண படுக்கையில் இருந்தான், அந்த பிண வாடையை முகர கூட முடியாமல் சென்றது முற்றிலும் மணியை விட்டு பிரிந்தோம்,



அவனது அம்மாவிற்கு பதில் என்ன கூறுவதென்று தெரியாமல் சமாதான படுத்த முடியாமல் தவித்தேன், அன்று முழுவதும் அவன் நினைவுகள் தான், அவனிடம் பழகிய அந்த இனிமையான நாட்களை ஒரே நாளில் விபத்து என்ற விதத்தில் மரணம் தட்டி பறித்து விட்டது எங்களிடம் இருந்து,. அவனை எந்த ஒரு விதத்திலும் நாங்கள் சந்தோஷ படுத்தியது இல்லை, அவனை எப்படியாவது ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்திருக்க முயற்சி செய்திருக்கலாம், அதற்குள் காலத்தின் கோலம்,.



விதி வலியது தான், அதற்காக நன்றாக வாழ வேண்டிய ஒருவனை இவ்வாறு செய்திருப்பது கொடூரமானது!!



இறக்கும் தருவாயிலும் அவன் தனது நிறுவனத்தில் நன் பெயர் பெற்றிருக்கிறான் எனும் போது சந்தோசங்கள் அதிகமே எங்களுக்கு,

நெல்லை ராஜா மற்றும் நெல்லை மணி என்று அவன் பெற்றிருக்கும் பெயர்கள் எங்களுக்கு புதிதே, நாங்கள் அவனை குண்டன் என்றே அழைத்துள்ளோம்,



எங்க ஊரு கதை என்கின்ற எனது blog ல் எனது நண்பனின் மரணமா இடம் பெற வேண்டும்,!!??!!



அவனிடம் பழகிய நினைவுகளுடன் எங்களது பயணம் தொடரும்,



பிரிவின் வலியோடு எனது நண்பனின் ஆன்மாவை அமைதி நிலைக்கு செல்ல,

எனது மாஸ்டரிடம் பிரார்த்திக்கிறேன்,