இத்துடன் ஒரு சிறு கதை தொகுப்பினை இணைத்து உள்ளேன்,.
வீட்டு முன்னால் ஓலைப்பந்தல் போடப்பட்டிருந்தது. பந்தலின் நடுவேவெள்ளைத்துணி கட்டியிருந்தார்கள். வீடு முழுவதும் மரண ஒலம்கேட்டுக்கொண்டிருந்த்து. " ஏய், ஐயா, என்ன பெத்த ராசா...!! என்னவிட்டுட்டு போயிட்டியே... அய்யோ... கபிலா.. இப்படி எங்கல தனியாவிட்டுட்டு போயிட்டியே..." என்று வாயில் எச்சில் ஒழுகஅழுதுக்கொண்டிருந்த்னர். மரண செய்தி கேட்டு சொந்தகாரர்கள், தெரிந்தவரகள்வர ஆரம்பித்தனர். வீட்டுக்கு முன்பு சைக்கிளும், டூவீலரும் குவிந்துஇருந்தது. பந்தல் அருகே உள்ள ஒரு கல்லில் உட்கார்ந்திருந்தான் சிவா.அழுது அழுது கண்ணெல்லாம் சிவந்திருந்தது. காலையில் விசயத்தைக்கேட்டதிலிருந்து அழுதுக்கோண்டேதான் இருந்தான். போஸ்ட் மார்ட்டம் முடிந்துபாடி வந்ததும் பெணகளுடன் சேர்ந்து பிணத்தை கட்டிப்பிடித்து அழுதான். மற்றஆம்பளைகளெல்லாம் விலகி நிற்க இவன் மட்டும் நெஞ்சில் அடித்து அடித்துஅழுதான்.யாரும் அவனை த்டுக்க முடியல. கொஞ்சம் நேரம் கழித்துநன்பர்களெல்லாம் வந்து அவனை இழுத்துட்டு போய் வெளியே உட்கார வைத்தனர்.பேச்சு வரவில்லை, வாய் கோணியது. " டேய் மணி, நம்ம கபிலன் நம்மள விட்டுட்டுபோயிட்டாண்டா...அய்யோ..கடவுளே.." என்று உளறிக்கொண்டிருந்தான். வந்தவர்கள்அனைவரும் இவனை வினோதமாக பார்த்தனர். நண்பர்களால் இவனை தேற்ற முடியவில்லை.தேம்பி தேம்பி அழுதான். உருண்டு பிரண்டு அழுததில் சாரமெல்லாம்அழுக்காயிருந்தது. "தண்ணியாவது குடிடா..?" என்று கெஞ்சிக் கேட்டான் மணி. எந்த பதிலும்சொல்லாமல் நிலைக்குத்திப் போய் உட்கார்ந்திருந்தான். அவனாகவே வாய்திறந்தான். "நாந்தாண்டா.. கபிலன கொன்னென்.. பேசாம நான் ட்ரெயின்ல போறேன்னுசொன்னான்.. நாந்தான் பஸ்ல போன்னு டிராவல்ஸ்ல ஏத்திவிட்டேன்..."என்றுஅழுது கொட்டினான்.
ஜமுனா தன் தம்பியோடு வந்தாள். அவளைப் பார்த்தும் தன் இரு கையால்கண்ணைத்துடைத்துக் கொண்டான். அவளை அழைத்துட்டு போய் கபிலனின் உயிரற்றஉடலைக் காட்டினான்..அவள் அவளை அறியாமல் அழ ஆரம்பித்தாள். அப்படியேஉட்கார்ந்து விட்டாள். கபிலனின் மேல் மாலைகள் குவிக்கப்பட்டிருந்தது.
சிவா வீட்டுக்குள் சென்று அங்கிருந்த தன் அம்மாவிடம் எல்லாருக்கும் காபிகொடுக்க சொன்னான். தீடிரென்று ஆளே மாறி விட்டான். எல்லா வேலைகளையும்இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்தான். நண்பர்களும் அவனுடன் சேர்ந்துகொண்டனர்.மதியம் மூன்று மணிக்கு மேல் கபிலனின் பாடியை தூக்குவதாக முடிவுபண்ணினர். மையான வண்டி வந்தது. கபிலன் அதில் எற்றப்பட்டான். சங்குஊதப்பட்டது. ஆம்பளைகள் வண்டியின் பின்னால் சென்றனர். பெண்கள் பெரும்கூச்சலிட்டு அழுதார்கள். ஜமுனாவும் ஆழுதாள். சிவா அம்மாவும், கபிலன்அம்மாவும் ஜமுனாவை வினோதமாக பார்த்தனர்." யார், இந்த பெண்ணென்று..?"..
வண்டிக்கு பின்னால் கபிலனின் முகத்தைப் பார்த்தவாறு வந்துக்கொண்டிருந்தான் சிவா. தெற்கு பஜார் லூர்து நாதன் சிலை தாண்டும் போதுமயக்கம் வந்தது. கபிலனின் நினைவலைகள் சிவா மனதில் எழும்ப ஆரம்பித்தன..அஸ்போர்ன்ஸ் ஸ்கூலப் பார்த்தான். கபிலனும் சிவாவும் அங்கதான்படித்தார்கள். அங்கு எட்டு வரைக்கும்தான். அதன்பின் ஜான்ஸ்லபடித்தார்கள். இஞ்ஜினியரிங்க் போறதுக்கு வாய்ப்பு கிடைத்தும் நான் சிவாகூடத்தான் படிபேன் என்று சேவியர்ஸ் காலேஜ்ல சிவா கூட சேர்ந்தான் கபிலன்.சின்ன வயசிலேருந்து ஒன்னாதான் சுற்றுவாரகள். அவர்களுக்குள்ளேகருத்துவேறுபாடு வந்ததே கிடையாது.என்ன கொஞ்சம் சிவா தைரியசாலி, கபிலன் கொஞ்சம் அமைதி டைப். வாரத்திற்குஒருமுறை கபிலனை படத்திற்கு கூட்டிட்டுபோயிருவான் சிவா. பாம்பே தியேட்டர், பேரின்பவிலாஸ் தியேட்டர் எனதிருநெல்வேலி தியேட்டர் முழுவதும் சுற்றுவார்கள்.எங்க போனாலும் சைக்களில்தான் போவார்கள். சிவாதான் அழுத்துவான். கபிலன்பார்கம்பில உட்கார்ந்திருப்பான்...நைட் வ.வு.சி கிரவுண்ட்ல உட்கார்ந்திட்டு கதை பேசிக்கொண்டிருப்பார்கள்.காலேஜ் முடிந்ததும் வேலை தேட ஆரம்பித்தர்கள்.கபிலன் கவர்ன்மெண்ட் எக்ஸாம் கோச்சிங்க் போறேன்னுட்டு சாப்டர் ஸ்கூல்பக்கத்தில் உள்ள செண்டருக்கு போயிருவான். கபிலன் வர்ற வரைக்கும்மார்க்கெட்ல உள்ள் மணி கடையில் உட்கார்ந்திருப்பான் சிவா. மணிஇரண்டானதும் நேராக வாய்க்கால்பாலம் பஸ் ஸ்டாப்புக்கு போய் கபிலனை கூட்டிட்டு வருவான். வ.வு.சிகிரவுண்ட்ல உட்கார்ந்திருக்கும் போது சிவா சொன்னன். " கபிலா, ஜமுனாவ பார்த்தேன்டா.." " எங்க வச்சுடா.. எப்ப பார்த்த..." என்று ஆர்வமாய் கேட்டான் கபிலன். "பாளை பஸ்டாண்ட்லதான்.. தோள்ல பேக்க மாட்டிகிட்டு சூப்பரா போனாடா.. ஆனாபேச முடியல..? "சூப்பரா இருந்தா நமக்கென்னடா.. பேச்ச மாத்ரியா.. ப்ளீஸ்..."என்றுசலிப்புடன் கூறினான். " யேய்.. சும்மா கத வுடாத.. அவள ஒரு தடவ கூட நினைக்க மாட்ட.. பெரியஇவன் கனக்கா பேசுற...உனக்கு அவள பார்ததா பயம்... அதான்.. அதுக்கு அவர்என்ன பண்னுவா..நல்ல பொண்ணுடா.. நீதான் மிஸ் பண்ணிட்ட..காலேஜ் படிக்கும்போதே நீ சொல்லிருக்கனும்.. நான் போய் சொல்றேன்னாலும் நீ வேனான்னுசொல்லிட்ட..”கபிலன் பதில் எதும் சொல்லவில்லை. எதிர்த்தாப்புல உள்ள கேலரியபார்த்துட்டு இருந்தான். ஈகிள் புக் செண்டர் மேல ஜீஸஸ் சேவ்ஸ் அஸ் என்றுலைட் எரிந்தது.." என்னடா..ஒன்னும் சொல்ல மாட்டுக்க.. இப்ப ஒன்னும் கெட்டுப் போகல.. அவஇங்கதான் எங்கயாவது வேலை பார்ப்பா.. நாளைக்கு பாளைபஸ்டாண்டுக்கு போவோம்..பார்த்து பேசுவொம்.. என்ன ஒகேவா..." என்றான் சிவா.கபிலன் சிரித்தான். தொலைந்து போன காதலை மறுபடியும் தேட ஆரம்பித்தான்.ஜமுனாவை நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது. காலேஜ் படிக்கும் போதேகைக்கூடும் நிலையில்தான் கபிலன், ஜமுனா காதல் இருந்தது. ஆனால் காதலைவெளிப்படுத்தாமலே இருவருமே பிரிந்தனர். மறுபடியும் ஜமுனாவைத் தேடி கபிலன்போக விரும்பவில்லை. தேடிப்போய் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தால்தன்னால் தாங்க முடியாது என்று நினைத்து அவளது எண்ணத்தை மறக்கமுயர்ச்சித்தான்..இப்பொழுது நாளை பார்க்கப்போகிற சந்தோசத்தில்தூங்கிப்போனான். .
காலையில் பாளைபஸ்டாண்டு ஹோட்டல் சரவனாஸ் அருகே நின்றுக்கொண்டிருந்தனர்.அவள் வேனி பஸ்ல வந்து இறங்கினாள்.சிக்னலை கிராஸ் பண்ணி நடக்க ஆரம்பித்தாள். ஜமுனா முன்ன விட இப்போது ரொம்பஅழகாயிருப்பதாக கபிலனுக்கு தோன்றியது." வாடா.." என்று இழுத்துட்டுப் போனான் சிவா. ஜமுனா முன்னால் போனாள்.தீடீரென்று ஸ்டேட் பேங்குள் நுழைந்தாள்.இவர்களுக்கு திகைப்பாயிருந்தது. இவர்கள் உள்ளே போய் அவளைத் தேடினார்கள்.ஜமுனா கபிலனை பார்த்துவிட்டாள். அழகிய சிரிப்புடன் அருகில் வந்தாள்." கபிலா, எப்படி இருக்கிங்க..!!" என்றாள் கண்ணில் ஆர்வம் பொங்க."ம்ம்ம்.. நல்லா இருக்கேன்...உங்கள பார்க்கதான் வந்தேன்.. ஆனால் நீங்கஇங்க வேலை பார்க்கிறீங்கன்னு எனக்கு தெரியாது..""என்ன பார்க்கவா..?" கண் விழி உயர்ந்தது. அருகில் இருந்த சிவா "வாங்களேன்வெளிய போய் பேசிட்டு வரலாம்.." என்றான்."வரேன்.." என்று கூறிவிட்டு உள்ளே போய் யர்ரிடமோ சொல்லிவிட்டு வெளிய வந்தாள்.மூவரும் அரசனை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். சிவா முன்னாடி போனான்.பின்னாடி ஜமுனாவும் கபிலனும் சிரித்து சிரித்துபேசிட்டு வந்தனர். கபிலனுக்கு கூச்சம் எல்லம் போயிருந்தது..அரசனில் ஜீஸ் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்தனர். கபிலன்தான் ஆரம்பித்தான்." உங்கள மறுபடியும் பார்ப்பேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை.. ரொம்பசந்தோசமா இருக்குது " என்றான். சிவா நைசா நழுவ பார்த்தான்." நீ பேசிட்டுஇருடா..வெளிய மணி போற மாதிரி இருக்குது.. பார்த்துட்டுவந்துருதேன்.."என்று கிள்ம்பினான்.கபிலனும், ஜமுனாவும் சிரித்துக் கொண்டார்கள். கணகளால் பேசிக்கொண்டார்கள்.சிவா உள்ளே வரும் போது கபிலன் பேசிக் கொண்டிருந்தான்" எப்படிங்க.. இண்டர்வியு ரொம்ப கஷ்டமா இருக்குமா.. "சிவா தன் தலையில் அடித்து கொண்டான்."ஹலோ, என்னங்க பேசிக்கிட்டிருக்கிங்க.. ஜமுனா இங்க பாருங்க..நான் ஒபனாவேகேட்குறேன்.. காலேஜ்ல இருந்தே உங்க மேல உசிர வச்சிருக்கான் கபிலன்..நீங்க என்ன சொல்றீங்க.." என்று போட்டு உடைத்தான். அவன் அப்படி கேட்டது.அவள் முகத்தில் வெட்கத்தை உண்டு பண்ணியது. இருவரையும் பார்த்தான் சிவா.
"பதிலை யாருட்ட சொல்லனும்.. உங்ககிட்டயா.. இல்ல உங்க நணபர்கிட்டயா.."என்றாள் ஜமுனா."இந்த உத்தமபுத்திரண்டதான்" என்று கபிலன் தலையை தன் கையால் திருப்பிகாட்டினான் சிவா. அவள் சிரிச்சிகிட்டு"பிடிச்சிருக்கு... போதுமா.."என்றாள். கபிலன் சந்தோசத்தின் உச்ச்த்திற்குசென்றான். அன்றிலிருந்து கபிலன் தினமும் ஜமுனாவைபார்க்க செல்ல ஆரம்பித்தான். அவர்கள் காதல் ஆரோக்கியமாகவளர்ந்தது..இதற்கெல்லாம் சிவாதான் என்று நினைத்துக் கொள்வான் கபிலன்.
ஜங்ஸனில் நல்ல கூட்டம். சென்னைல பேங்க் எக்ஸாம் இருந்தது. அத்ற்குகபிலனை வழியனுப்ப வந்திருந்தான் சிவா. கூட்டத்தை பார்ததும் " பஸ்லபோடா.." என்று வர மறுத்த கபிலனை வலுகட்டாயமா இழுத்துட்டு வந்து பஸ்லஎற்றிவிட்டான்." நல்லா எக்ஸாம் எழுதுடா.. அப்புறம் ஜமுனாவும் பேங்கு, நீயும் பேங்கு..கலக்கலாம்.." கபிலன் சிரித்துக்கொண்டே கை ஆட்டினான். அதுதான் அவன் கடைசிசிரிப்பா இருந்தது.
வெள்ளக்கோவில்ல கபிலனை எரித்தார்கள். தாமிரபரணியில் தலை மூழ்கி வீடுவந்து சேர்ந்தார்கள். அதனை தொடர்ந்து மூன்றாவது நாள் விசஷேம், பதினாறாவதுநாள் விசஷேம் என முன்னின்று நடத்தி வைத்தான். எப்பொழுதும் சோகமாக திரியஆரம்பித்தான். உடல் மெலிய ஆரம்பித்தான். தாடி வளர்த்தான்.சிவா அம்மாஎவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். இவன அசையவில்லை. கபிலன் கூட எங்கெல்லாம்சுற்றினானோ அங்கெல்லாம் போய் உட்கார ஆரம்பிததான். நம்மாலதான் கபிலன்இறந்தான் என்று நினைக்கும் பொதெல்லாம் இந்த உலகத்தை வெறுக்கஆரம்பித்தான். இரண்டு தடவை தற்கொலை செய்ய முற்பட்டு தோற்றுப்போனான்...தீடீரென்று கபிலன் தான் கனவில் வந்து தான் சாதிக்க நினைத்ததை நீயாவதுசெய்யுடா என்று சொன்னதாகவும் , அடுத்த நாள் முதல் சிவாவும் கிளாஸ் போகஆரம்பித்தான். சிவா வீட்ல ரொம்ப சந்தோசப்பட்டார்கள். பையன்திருந்திவிட்டான் என்று.. அடிக்கடி ஜமுனாவை போய் பார்ப்பான். அவள்க்குஇவன் ஆறுதல் கூறுவான். இவனுக்கு அவள் ஆறுதல் கூறுவாள்.குருப் 2 ரிசலட் வந்தது. இண்டர்வியூ போறதுக்கு முதன்முறையா தாடியைஎடுத்தான். பளிச்சென்று இருந்தான். கபிலனின் இரண்டாவது நினைவு தினம்வந்தது. நண்பர்கள் அனைவரும் பெரிய அளவில் பண்ண பிளான் பண்ணினார்கள்.மணிதான் சொன்னான் " பேப்பர்ல பெரிய விளம்ப்ரம் கொடுப்போம். தெற்கு பஜார்முழுவதும் பேனர் வைப்போம்.. " என்றான்.சிவா யோசிச்சிக்கொண்டே உட்கார்ந்திருந்தான். அடுத்த நாள் குருப் 2இண்டர்வியூ ரிசல்ட் வந்தது. இண்டர்வியூவில் பெயில் ஆயிருந்தான். அதைபற்றி அவன் கவலைப்படவில்லை..சைக்கிளை எடுத்துட்டு சமாதானபுரம் ரோட்ல போனான். சிலை செய்யிற கடைக்குபோனான். அங்கே எம்.ஜி.ஆரும், காந்தியும்,அண்ணாவும் நின்றுக் கொண்டிருந்தனர். ஒனரைப் பார்த்தான்." ஐயா, ஒரு சிலை செய்யனும்..""யார் சிலைப்பா.." என்றார் பெரியவர்.தன் பாக்கெட்டில் இருந்து கபிலன் போட்டாவை எடுத்துக் கொடுத்தான்.பெரியவர் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்தார். தன் நண்பனைப் பற்றி சொன்னான்.பெரியவர் ஆதங்கப்பட்டார் " கண்டிப்பா நல்ல பண்ணிரலாம் தம்பி " என்றுசிவாவை அனுப்பி வைத்தார்.. தன் வீட்டு முன்னால் உள்ள இடத்தை சுத்தம் செய்தான். சிலையை கொண்டுவந்து இற்க்கினார்கள். சிலையை நிறுத்தினர். அவன் நினைவு நாளன்றுகிளரிந்தா சர்ச், நூற்றாண்டு மண்டபம் அங்குள்ள பிச்சைககாரர்கள், எழைஎளியவர்களை அழைத்துட்டு வந்து சாப்பாடு போட்டான். கபிலன் அப்பாதான்சிலையைத் திறந்த்தார். ஜமுனாவும் வந்திருந்தாள்.நண்பர்களும், ஜமுனாவும், சிவாவும் கபிலன் சிலையை கண் கலங்கபார்த்துக்கொண்டிருந்தனர்.
என்னுராய் இருந்தாய்....!
என்னை விட்டு சென்றாய்....!
என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கிறாய்....!
நண்பனே...!
என்று சிலையின் அடியில் பொரிக்கப்பட்டிருந்தது..கம்பீரமாக நின்றுக்கொண்டிருந்தான் கபிலன்.....
இதுவே சிறந்த நண்பனுக்கு எடுத்துக்காட்டு!!!!!!!
நன்றி எனது ஆருயிர் நண்பன் செல்வன் ஜெபஸ்டின் அவர்களுக்கு !!!!
இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே..... யாரையும் குறிப்புடுவன அல்ல......
Thursday, August 25, 2011
Saturday, July 30, 2011
நானும் வேலை பார்க்குறேன்
நான் கடந்த ஒரு வாரமா தான் ஆச்சு இந்த மென் பொறியாளர்கள் கூட வேளைக்கு சேர்ந்து..,,.., அதுக்குள்ள ஏதோ ரொம்ப நாள் ஆன மாதிரி பீலிங் வந்திடுச்சு,. என்ன பண்றது,.,., ஊரோடு ஒத்து வாழனும்ல!!!மேலும் ரொம்ப சந்தோசமா தான் போயிடு இருக்கு,.., அப்டியே C programming அது இது நு படிக்க சொல்றாங்க,.,. அப்டியே +1 ல படிச்சதெல்லாம் recall பண்ணி பார்க்குறேன் ஒண்ணுமே வர மாட்டிக்குது,.,. பார்க்கலாம்.,., கடைசியா நானும் வேலை பார்க்குறேன், நானும் வேல பார்க்குறேன், ஆமா./.,
Thursday, July 28, 2011
missing you friends
நான் இப்போ வேலைக்கு போனது என்னமோ ரொம்ப சந்தோசமா தான் இருக்கு,. இருந்தாலும் ஒரு சின்ன வருத்தம் உண்டு,.,. என்னன்னா எங்க அண்ணா திருமண வரவேற்பு க்கு என்னால போக முடியல,. எங்க batch members , invite பண்ண முடியல,. இருந்தாலும் ரொம்ப ஜாலி யா தான் போயிடு இருக்கு ட்ரைனிங்,.,.,.,. என்னோட நண்பர்களும் பார்க்க முடியல,. என்னோட திங்கிங் புல்லா மதுரை ல தான் இருந்தது,.,. கொஞ்ச கல்லூரி நண்பர்கள் invite பண்ணிட்டு அவங்கள சந்திக்க முடியாம போய்டுச்சு,. சாரி friends ,..,.,,.
Saturday, July 2, 2011
plantation:
கடந்த நாலு நாட்களா செமயா வெயில் கொளுத்துது மதுரை ல., even சிவகாசி ல இன்னும் பிச்சி எடுக்குது., சோ இந்த மாதிரி டைம் ல தான் நாம peoples க்கு aware பண்ணனும்,.., மரங்கள வளர்க்கணும் னு அப்படி நா தான் மழை னு ஒன்னு பெய்யும்,. பச்சை பச்சை னு நாம நம்ம நாட்ட தான் பார்க்கணும் னு ஆசை படணும்,. சோ pls aware தி peoples டு plant the trees ., வீட்டுக்கு ஒரு மரம் னு மாத்தி அதை ஒருவனுக்கு ஒரு மரம் னு மாத்தி அதையே அவன் பராமரிக்கவும் செய்யணும்.,. இந்தியா sorry உலகம் முழுவதும் இத பரப்பனும் னு நான் கேட்டுக்குறேன்.,.,
இவன் ஜெய் சங்கர் and சிவா
மதுரை, சிவகாசி, ராம்நாடு மக்கள் சார்பா கேக்குறோ
உதவும் மனப்பான்மை
ஏழை மக்களுக்கு உதவி பண்றதுல நாம ஏன் இன்னும் ஆர்வம் காட்ட மாட்டிகுறோம் னு தெரியல., எனக்கு என்னோட பள்ளி கூட வாழ்க்கைல உதவி பண்ணவாங்க நிறைய பேர்., அவங்கள பண்ணாம இருந்திருந்த நான் இன்னைக்கு ஒரு இன்ஜினியரிங் பண்ணிருக்கவே முடியாது., அதுல முக்கியமானவர் எங்க நெல்லை நாராயணன் மாமா, என்னோட படிப்புக்காக நிறையவே ஸ்பென்ட் பண்ணிருக்காரு! so நாம நம்மால முடிஞ்சா உதவி யா நல்ல படிக்குற குழந்தைகள் கஷ்டபடுற குழந்தைகளுக்கு ஹெல்ப் பண்ணனும்., future ல நாம எல்லாரும் சேர்ந்து கண்டிப்பா ஒரு இயக்கம் உருவாக்குவோம்.,
இந்த விஷயத்துல எனக்கு தெரிஞ்சு தின மலர் மதுரை பிரதி குரூப் எப்படியோ தேடி பிடிச்சு கஷ்ட படுற குழந்தைகளுக்கு யார் மூலமாவது ஹெல்ப் கிடைக்கிறதுக்கு வழி பண்றாங்க., hats ஆப் டு தேம
இவன் சிவா/..,
அரசியல் வாதிகள்:
DMK விட்டுட்டு போனதா ADMK கண்டிப்பா பண்ண நல்ல இருக்கும்.,
போன ஆட்சியில இலவசமா வீடு தரும் திட்டம் னு former CM சொல்லிறுக்காறு போல இப்போ வேற ஆட்சி வந்ததல அதை நம்பி ஏமாந்த மக்கள் என்னமோ அதிகம் தான்., சோ போன ஆட்சி இந்த ஆட்சி என்று சொல்லாம நம்ம அம்மா வந்து அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தந்த நல்ல இருக்கும்., ஏனா அவங்களோட குடிசைய எடுத்துட்டு தான் கடன் வாங்கி மக்கள் அந்த வீட்ட கட்ட முயற்சி பண்றாங்க.,
அப்படி போன ஆட்சி இந்த ஆட்சி னு பாத்திருந்தா நம்ம ஊர்ல நாலு வழி சாலை யா பார்க்கவே முடியாது
டாஸ்மாக்:
என்ன தான் அரசு டாஸ்மாக் டாஸ்மாக் னு குடிமகன்கள் vote விழுந்தாலும் இதுல பாதிக்க பட போற மக்கள் என்னமோ மிடில் கிளாஸ் and லோ கிளாஸ் peoples தான்., அவங்க vote காக எதையும் செய்வான்கள் அரசியல்வாதிங்க., சோ விழிபுனர்வா இருங்க தாயி குலங்களே.,மேல இதனால் அரசு க்கு என்னமோ லாபம் அதிகம் தான் ., தண்ணி வண்டி காரங்க எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்ல., தண்ணி எவ்ளோவ் அடிச்சாலும் steady யா இருக்கறவன் தான் மனுஷன்., அதை விட்டுட்டு ரோடு ல கிடக்குறது, வீட்டுக்கு போற லெவல் க்கு குட தெம்பு இல்லாத மனுஷங்களா தான் நாம தண்டிக்கணும்., அதுவும் வர தினசரி வருமானம் புல்லா full ல போடுற பாழா போன சில பேரால தான் குடிமகன்கள் மானம் கப்பலேறி போகுது., இத புரிஞ்சிக்கிட்டு decent ஆ தண்ணி அடிங்க,.
இவன் பிரியமுடன்
சிவா
Tuesday, April 12, 2011
Tuesday, March 8, 2011
தமிழ் நாடு தேர்தல்
DMK kkuttani பிரிஞ்சது என்னமோ சந்தோசமா தான் இருக்கு, இருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் நாடு நிலைமை அதே தான் /...
என்ன பொறுத்த வரைக்கும் ADMK கொஞ்ச வலுவா தான் இருக்கு. பொறுத்திருந்து பார்க்கலாம்,,, மக்கள் ஒரு ஏமாளிகள் தானே!!!!
கள்ள ஓட்டு க்கு காகவே ஒரு குடும்பத்து க்கு ஒரு அடையாள அட்டைய ரத்து பண்ணிருக்காங்க போல, என்னன்னா எனக்கு இன்னும் varala voter card,, என்னனு கேட்டா விலாசம் சரி இல்ல, போட்டோ சரி இல்ல னு சொல்றாங்க .. என்ன பண்றது,, இந்திய நாலே அப்டி தானே
என்ன பொறுத்த வரைக்கும் ADMK கொஞ்ச வலுவா தான் இருக்கு. பொறுத்திருந்து பார்க்கலாம்,,, மக்கள் ஒரு ஏமாளிகள் தானே!!!!
கள்ள ஓட்டு க்கு காகவே ஒரு குடும்பத்து க்கு ஒரு அடையாள அட்டைய ரத்து பண்ணிருக்காங்க போல, என்னன்னா எனக்கு இன்னும் varala voter card,, என்னனு கேட்டா விலாசம் சரி இல்ல, போட்டோ சரி இல்ல னு சொல்றாங்க .. என்ன பண்றது,, இந்திய நாலே அப்டி தானே
about trian implementation in tamil nadu
என்ன தான் மம்தா பேனர்ஜி நிறைய ரயில் விட்டாலும் தமிழ் நாட்டுக்கு என்னமோ கம்மி தான் .. அப்டியே பாத்தாலும்,, கோவை to மதுரை and கோவை to tirunelveli, nagar kovil ரயில் லாம் கம்மி தான்.. சீரியஸ் ah ஏதாச்சும் action எடுங்க மா !!!
Friday, February 4, 2011
சென்னை நிலவரம்
என்ன தான் சென்னை நல்ல முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் அந்த சேரி, கூவம் ல வாழறவங்க இருக்க தான் செய்றாங்க!! ஓகே அது கூட இருக்கட்டும்,
இந்த electric train ல பிச்ச எடுக்றவங்கல ஏன் கண்ட்ரோல் பண்ண முடியல நம்ம அரசால? இதுல பாதி பேரு சின்ன சின்ன பொடிசுங்க தான்? அநேகமா slum dog படத்துல வர்ற மாதிரி பொடிசுங்கள கடத்தி, மிரட்டி தான் பிச்ச எடுக்க vaikiranga போல, இத பாத்துட்டு போலீஸ் லாம் என்ன தான் பண்ணுவாங்களோ? இல்ல அவங்களுக்கு ஒரு amount போய்டும் போல!!! மேலும் இந்த வயசான பெருசுங்களும் இருக்காங்க இந்த activities la.
இது சம்பந்தப்பட்ட அதிகாரிங்க நடவடிக்கை எடுத்தா நல்ல இருக்கும்.
இந்த electric train ல பிச்ச எடுக்றவங்கல ஏன் கண்ட்ரோல் பண்ண முடியல நம்ம அரசால? இதுல பாதி பேரு சின்ன சின்ன பொடிசுங்க தான்? அநேகமா slum dog படத்துல வர்ற மாதிரி பொடிசுங்கள கடத்தி, மிரட்டி தான் பிச்ச எடுக்க vaikiranga போல, இத பாத்துட்டு போலீஸ் லாம் என்ன தான் பண்ணுவாங்களோ? இல்ல அவங்களுக்கு ஒரு amount போய்டும் போல!!! மேலும் இந்த வயசான பெருசுங்களும் இருக்காங்க இந்த activities la.
இது சம்பந்தப்பட்ட அதிகாரிங்க நடவடிக்கை எடுத்தா நல்ல இருக்கும்.
Subscribe to:
Comments (Atom)